சைக்கோ என கூறி கழற்றி விட்ட காதலியின் வீட்டிற்கு ஆவேசமாக சென்று நியாயம் கேட்ட காதலனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் 27-வயதான ஜெபின். இவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டில் (பெகரின்) பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐடி பெண் ஊழியரான 25-வயது ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இருவரும் கல்லூரியில் படிக்கும் நாட்களில், இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிவதோடு ஷாப்பிங், டேட்டிங், என பல்வேறு ஊர்களுக்கும் சென்று வந்துள்ளனர். அப்போது ஜெபின் தனது காதலிக்கு விலையுயர்ந்த பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். இது தவிர அவ்வப்போது இன்ப சுற்றுலா செல்லும் இவர்கள் தமிழகம், கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தனியாக அறை எடுத்தும் தங்கியும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெபின் வேலைக்காக வெளிநாட்டிற்கு (பெகரின்) சென்ற பிறகு, ஆனி ரெனிஷாவும் தக்கலையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு, ஆனி ரெனிஷா, புதிதாக அறிமுகமான நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்துள்ளார். இதை அறிந்து ஜெபின் அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில்,
ஆனி ரெனிஷா ஜெபினுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெபின் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு வெளிநாட்டில் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊருக்கு திரும்பி ஜெபின், ஆனி ரெனிஷா வீட்டிற்கு உறவினர்களை அனுப்பி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவரின் பெற்றோர் பெண் கொடுக்க சம்மதிக்காமல் உறவினர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதன் பிறகு ஜெபினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட ஆனி ரெனிஷா, நீ ஒரு சைக்கோ உன்னுடன் குடும்பம் நடத்த முடியாது. என்னை மறந்து விடு. எனது வீட்டிற்கு பெண் கேட்டு யாரையும் அனுப்பாதே என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஜெபின் காதலியின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம், காதலியுடன் சேர்ந்து தான் செல்போணில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி நியாயம் கேட்டதோடு, அவரை வெளியே வருமாறு அழைத்து வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று அடாவடியில் ஈடுபட்டார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தக்கலை போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டனர். அப்போது ஆவேசப்பட்ட ஜெபின் பெண்களுக்கு ஒரு நியாயம், ஆண்களுக்கு ஒரு நியாமா? என போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
ஒரு கட்டத்தில் ஜெபினை போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆனி ரெனிஷா காதலனை ஏற்க மறுத்த நிலையில், அவரின் தந்தை விஜயராஜ் தக்கலை காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார். இதனையடுத்து ஜெபின் மீது ஆபாச படங்களை பொது வெளியில் காட்டியது, அத்துமீறி வீட்டில் நுழைந்து கொலை மிரட்டல் செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா