கேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு

கேரளாவில், புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ளன. கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 17 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி ஒன்றரை வயதான ஸ்ரீ…

கேரளாவில், புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ளன.

கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 17 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி ஒன்றரை வயதான ஸ்ரீ என்ற குட்டியானை திடீரென உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள், உடற்கூராய்வு செய்து பரிசோதனை மேற்கொண்டபோது, அந்த குட்டி யானை, ஹர்பிஸ் என்ற வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதற்கிடையே, அதே வைரஸ் தாக்குதல் காரணமாக, நேற்று அர்ஜூனன் என்ற 4 வயது யானையும் உயிரிழந்தது. மேலும், இரண்டு யானைகளுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட யானைகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்கள் மூலமாக பரவும் இந்த வைரஸ், யானைகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.