டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், நமது நாட்டின் திறமையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக “Hindustani Way” என்ற பாடல் தயாராகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/arrahman/status/1412419657697480718
இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார். அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் “Hindustani Way”பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







