முக்கியச் செய்திகள் செய்திகள்

அசாமில் யானைகளுக்கு நடந்த துயரம்!

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு துடிக்கும் போது, நம் கண்களில் கண்ணீர் தானாக வரும். அசாமில் ஒன்றல்ல இரண்டல்ல 18 யானைகள் மின்னல் தாக்கி பிளிறிக்கொண்டே பரிதாபமாக உயிரை விட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன் அசாமின் எல்லைப் பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங் ,வனப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது . அப்போது அவ்வழியாக வந்த 18 யானைகள் மரங்களின் கீழ் வரிசையாக ஒதுங்கிய போது, மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அடை மழையிலும் யானையின் பிளிறல்கள் அந்த வனப்பகுதிகளில் எதிரொலித்ததாக வனப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இன்னொரு புறம் இந்தியாவில், ரயில் பாதையை கடக்கும் போது, நூற்றுக்கணக்கில் யானைகள் உயிரிழந்து வருகின்றன.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து அரசு தெரிவித்த தகவலில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது என தெரிவித்தது. அசாமில் அதிகபட்சமாக 62 யானைகளும், மேற்கு வங்கத்தில் 57, ஒடிசா வில் 27, உத்தரகாண்ட்டில் 14, கேரளா வில் 9, ஜார்கண்ட் மாநிலத்தில் 7, தமிழ்நாட்டில் 5 யானைகளும், கர்நாடகாவில் 3 யானைகளும் ,திரிபுரா மற்றும் உத்திர பிரதேசத்தில் தலா 1 யானையும் ரயில்வே இருப்பு பாதையை கடக்கும் போது, உயிரிழந்துள்ளன.

யானைகள் பாதுகாப்பு திட்டம் மூலம், மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 213 கோடிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கிறது. ஒடிசாவுக்கு ரூபாய் 24.4 கோடியும், மேகாலயாவுக்கு ரூ. 21.56 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூ.20.74 கோடியும் , உத்தரகாண்ட்டிற்கு ரூ.18.72, கோடி , அசாம் மாநிலத்திற்கு ரூ.15.23 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுளளது. மேற்கு வங்கத்திற்கு ரூ.10.61 கோடி, ஜார்க்கண்ட் ரூ.9.58 கோடி ,அருணாச்சல் பிரதேசம் ரூ.8.99 கோடி, நாகலாந்து ரூ.6.14 கோடி என இந்த பட்டியல் நீள்கிறது.

Advertisement:
SHARE

Related posts

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

Jeba Arul Robinson

சென்னையில் லேசான நில அதிர்வு

Halley karthi

இணையத்தில் பேசுபொருளாக மாறிய லிசிபிரியாவின் ட்விட்டர் பதிவு!

Saravana Kumar