கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளாவில் இடதுசாரி கட்சி தற்போது நிலவரப்படி முன்னிலையில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேலும் கேரளாவில்…

கேரளாவில் இடதுசாரி கட்சி தற்போது நிலவரப்படி முன்னிலையில் உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேலும் கேரளாவில் 15 வது சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும் (LDF) ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் (UDF)இடையே கடும் போட்டி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் 16 தனித் தொகுதிகளாகும்.

இந்த நிலையில் தற்போது இடதுசாரி கட்சி 94 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியும், மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் வகிக்கின்றனர். மேலும் கேரளாவில் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.