முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம், எழுதிக்கலாம், இல்லன
அடிச்சுருவேன் என்று மதிய வேளையில் சாப்பிடாமல் வேலை பார்க்கும் தனது ஆசிரியரை திக்கி தடுமாறிப் பேசி சாப்பிட மிரட்டும் ப்ரீகேஜி குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், கொல்லம் , புனலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி
ஒன்றில் நடந்த குழந்தையின் பாச மிரட்டலை ஆசிரியர் ஒருவர் வீடியோவாக எடுத்து
வெளியிட்டுள்ளார். மதிய வேளையில் சிறு குழந்தைகள் முறையாக சாப்பிடுகிறார்களா என்பதை கவனிப்பது வகுப்பு ஆசிரியர்களின் வேலை. இதை முடித்த பின்பு தான் வகுப்பு ஆசிரியர்களுக்கு சாப்பாடு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கொல்லம், புனலூரில் உள்ள பள்ளி ஒன்றில் pre-kg படிக்கும் குழந்தைகள் முறையாக சாப்பிடுகிறார்களா என்பதை கவனித்துக்கு கொண்டு, தனது எழுதும் வேலையை செய்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை சாப்பிடு, அப்புறம் எழுது என மிரட்டும் மாணவன் மிரட்டுகிறார். ஆசிரியர் எதை செல்லியும் கேட்காத அந்தக் குழந்தை பாசமிகுதியால் சாப்பிடு இல்லை அடிச்சுருவேன் என மிரட்டும் மிரட்டல் வீடியோவை செல்போனில் பதிவு செய்த ஆசிரியை இதை சமூக வலைதளங்களில்
பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கள்ளம் கபடம் இல்லாத மனது பிள்ளை மனது என்பதை உணர்த்துகிறது. அதிஷ்டம் செய்த ஆசிரியை என இந்த வீடியோவை பார்த்த பலரும் கூறி வருகின்றனர்.
-ம.பவித்ரா