முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கேரள நரபலி சம்பவம்; என்ன நடந்தது?

இந்த நரபலி குறித்த விசாரணையில் இவர்களை தவிர பகவல் சிங்கின் வீட்டில் மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்தியாவில் அவ்வப்போது நரபலி சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். ஆனால் கேரளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு உடல் பாகங்கள் பெங்களூருவில் உள்ள சித்தர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகவல் சிங் என்பவரின் வீட்டில் நரபலி கொடுக்கப்பட்டனர். இது தொடர்பாக முகமது ஷாபி, பகவல் சிங், லைலை ஆகியோரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விசாரணையில் இவர்களை தவிர பகவல் சிங்கின் வீட்டில் மேலும் சிலர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் பகவல் சிங்கின் வீட்டில் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தினர். முன்னதாக ஷாபி, பகவல் சிங், லைலா ஆகியோரை போலீசார் கொச்சியில் இருந்து நரபலி சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நரபலி கும்பலிடம் இருந்து 2 பெண்கள் மயிரிழையில் உயிர்தப்பியது தெரியவந்து உள்ளது. பத்மாவுக்கும், ரோஸ்லிக்கும் முன்னதாக பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த லாட்டரி விற்கும் பெண் உள்பட 2 பெண்களை முகமது ஷாபி குறி வைத்திருந்தார். பத்தனம்திட்டா ஆனப்பாறை பகுதியை சேர்ந்த லாட்டரி விற்கும் பெண்ணை அணுகிய ஷாபி, ஒரு நாள் அவரிடமிருந்து மொத்தமாக லாட்டரியை விலைக்கு வாங்கி நட்பை ஏற்படுத்தி உள்ளார்.அதன் பிறகு தனக்குத் தெரிந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அந்தப் பெண்ணை முகமது ஷாபி அழைத்துச் சென்றுள்ளார். ஒரு நாள் அங்கு வேலை பார்த்ததற்கு பகவல் சிங் அந்த பெண்ணிற்கு ஆயிரம் ரூபாயை சம்பளம் கொடுத்து உள்ளார். மறுநாள் அந்த பெண் வேலைக்கு வந்த போது அங்குள்ள ஒரு அறைக்கு பகவல் சிங் அந்தப் பெண்ணை அழைத்து உள்ளார். அவர் அறைக்குள் நுழைந்தவுடன், சில சோதனைகள் நடத்த வேண்டும் என்று கூறி அங்குள்ள கட்டிலில் படுக்குமாறு கூறி உள்ளார்.

அந்தப் பெண் கட்டிலில் படுத்தவுடன் ஷாபி, லைலா ஆகியோர் சேர்ந்து அவரை கட்டிப் போட முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து அலறியடித்தபடி தப்பி வெளியே ஓடினார். இதே போல பந்தளம் பகுதியை சேர்ந்த மற்றோரு பெண்ணை ஷாபி வீட்டு வேலைக்கு ஆள் தேவை என கூறி பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அந்தப் பெண் வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார். இந்த 2 பெண்களும் நரபலியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். இதே போல மேலும் பல பெண்களை நரபலிக்காக இந்தக் கும்பல் அணுகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

பின்னர் நரபலி நடந்தது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்காக 3 பேரையும் நடித்து காண்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி 3 பேரும் பெண்களை எப்படி நரபலி கொடுத்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டியதையும் நடித்துக் காண்பித்தனர்.நரபலி கொடுக்கப்பட்ட அறையில் பல்வேறு இடங்களிலும் அங்கிருந்த பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருப்பதை போலீசார் கண்டனர். மேலும் நரபலி கொடுத்த பிறகு அவர்களது உடல்களை துண்டு துண்டாக வெட்டுவதற்காக இழுத்து சென்ற ரத்த தடயங்களையும் போலீசார் கண்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது தான் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. பொருளாதார ரீதியாக குடும்பம் வளர்ச்சி அடையவும், குடும்பத்தில் செல்வம் கொழிக்கவும் உடல் நலத்தோடு வாழவும் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பத்மா, ரோஸ்லியின் உடல்களை வெட்டிய பிறகு முக்கிய உடல் பாகங்களை அவர்கள் பிரிட்ஜுக்குள் பதப்படுத்தி வைத்துள்ளனர்.அதில் இருந்து 10 கிலோ மாமிசத்தை எடுத்து குக்கரில் வேகவைத்து 3 பேரும் சாப்பிட்டு உள்ளனர். பின் பிரிட்ஜில் மீதமிருந்த உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்து உள்ளனர். சில உடல் பாகங்களை பெங்களூருவில் உள்ள சித்தர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மனித மாமிசத்தை வேகவைத்து சாப்பிட்ட குக்கர், உடல்களை வெட்ட பயன்படுத்திய கத்திகள், பிளாஸ்டர் உள்பட பொருட்களை போலீசார் அங்கிருந்து கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் உடல்களை வெட்டப் பயன்படுத்திய கத்தி, கயிறு உள்ளிட்ட பொருட்களை வாங்கிய கடைகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உறைபனியில் பாதுகாப்பில் ஈடுபடும் வீர்ரகளுக்காக சோலார் கூடாரம்; லடாக் இன்ஜினியரின் கண்டுபிடிப்பு

EZHILARASAN D

ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவது நோக்கம் அல்ல – ஜிஎஸ்டி ஆணையர்

Web Editor

உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை: ராதாகிருஷ்ணன்!

Vandhana