கன்னியாகுமரி: ஆசிட் கலந்த குளிர்பானம் அருந்திய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

களியாக்காவிளை அருகே ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின், குழித்துறை…

களியாக்காவிளை அருகே ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த
சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின், குழித்துறை அருகே அதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி 6 வகுப்பு பயின்று வந்தார்.

சம்பவத்தன்று மாணவன் அஸ்வின் மதியம் உணவு சாப்பிட நிற்கும்போது சக மாணவர் ஒருவர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். அஸ்வினும் வாங்கி குடித்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு வயிறு வலி எடுத்துள்ளது.

இதையடுத்து பெற்றோர்கள் மாணவனை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, குளிர்பானத்தில் ஆசிட் தன்மை அதிகம் இருந்ததால், குடல், தொண்டை மற்றும் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களாக சிறுவனின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இன்று தற்போது சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.