தென்காசி மாவட்டம், தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள
பாலருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால், மூடப்படுவதாக கேரள
வனத்துறை அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து
வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகள்
மற்றும் நீரோடைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. குறிப்பாக,
குற்றால அருவியின் உட்புறம் உள்ள சாமி சிலைகள் தெரியும் அளவிற்கு, குற்றால
அருவி வறண்டு காணப்படுகிறது.
அந்த வகையில், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலம்
ஆரியங்காவு பகுதியில், உள்ள பாலருவியில் லேசாக தண்ணீர் கொட்டி வந்தது.
இதனால், விடுமுறை தினத்தை கொண்டாட ஏராளமான தமிழக சுற்றுலா பயணிகள்,
பாலருவிக்கு சென்று ஆனந்த குளியலிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது
பாலருவி தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு விட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலருவி, தற்போது
மூடப்பட்டுள்ளதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில
தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை இந்த தடையானது
தொடர வாய்ப்புள்ளதாக, கேரள வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கு. பாலமுருகன்