கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரை இறுதிப் போட்டிகள் மே 27ம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி
ஹாக்கி மைதானத்தில் பன்னிரண்டாவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக லீக் போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
முதல் காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியும்
கோவில்பட்டி, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் போட்டு சமநிலை பெற்றன, பின்னர் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர்
ஜெனரல் ஆப் இந்தியா அணியும் சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணியும் மோதின. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மூன்றாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன்= போர்டு அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதின. இதில் 4:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நான்காவது காலிறுதி போட்டியில் செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே
அணியும் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் மோதின. இதில் 5:1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி
வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரை இறுதி போட்டிகள் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது







