29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் தமிழகம்

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருப்பூர், திருப்பத்தூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் தென் கேரள கடலோரப் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தாய், மகள் வெட்டிபடுகொலை!

விரட்டும் வறுமை: விருதுகளை விற்று மருத்துவச் செலவு செய்த பிரபல நடிகை!

Halley karthi

சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

Ezhilarasan