கேரளாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவந்தால்தான் கர்நாடக எல்லைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக எல்லைப்பகுதிக்குள் பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்கவேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கர்நாடக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.







