காட்டுப்பாதையில் திடீரென வந்த காட்டுயானை – காரை விட்டு தப்பியோடிய குடும்பத்தினர்: வைரலாகும் வீடியோ!

கேரளா மலப்புரம் வனப்பகுதியில் காரில் பயணித்த போது திடீரென வந்திறங்கிய காட்டுயானையால் அதிர்ச்சிக்குள்ளான காரில் இருந்த குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து…

கேரளா மலப்புரம் வனப்பகுதியில் காரில் பயணித்த போது திடீரென வந்திறங்கிய காட்டுயானையால் அதிர்ச்சிக்குள்ளான காரில் இருந்த குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கூடலூர் செல்லும் பாதையானது வனப்பகுதிக்குள் இடையே செல்கிறது. இந்த வனப்பகுதிக்குள் புலி,யானை,கரடி உள்ளிட்ட பல வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் மலப்புரம் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தப்போது வனப்பாதையில் திடீரென காட்டுயானை ஒன்று வந்திறங்கியது.

இதனால் செய்வதறியாது தவித்த குடும்பத்தினர் காரை பின்நோக்கி செலுத்த முயன்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக காரின் பின்புற சக்கரம் மண்னில் புதைந்தது. இதனால் பதறிப் போன குடும்பத்தினர் உயிரை காப்பாற்றிக்கொள்ள காரில் இருந்து இறங்கி தப்பியோடினர்.

இதில் ஒரு பெண் மட்டும் நிலைதடுமாறி கீழே விழுந்து பின் மீண்டும் அருகிலிருந்த மற்றொரு காரின் பின்புறமாக ஒளிந்து கொண்டார்.சுமார் ஒரு மணி நேர  காத்திருப்புக்கு பின் யானை கடந்து சென்றது. பின்னர் அங்கிருந்து காரை எடுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.