திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.   கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேப்பரம்பு – ஒலவக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த ஓமினி காரின் திடீரென…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ
பிடித்து எரிந்தது.  

கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேப்பரம்பு – ஒலவக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த ஓமினி காரின் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இன்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்ததும் காரின் ஓட்டுநர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு காரை விட்டு இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையும் படியுங்கள்: தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.