முக்கியச் செய்திகள் சினிமா

“சுதா கொங்கரா ” இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய படம்

சூர்யாவினால் தாமதம். எனவே பெண்களை மையப்படுத்திய கதையில் கீர்த்தி சுரேஷ்  வைத்து புதிய படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா?

”துரோகி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்  சுதா கொங்கரா. ஆனால் அப்படம் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதன் பின் இவர் இயக்கிய இறுதிச் சுற்று திரைப்படம் மூன்று “பிலிம்பேர்” ஒரு தேசிய விருது எனத் திரையுலகில் பல்வேறு விருதுகளைப் பெற்று அவருக்குத் தமிழ் திரையுலகில் முக்கிய இடித்ததைப் பெற்றுத்தந்து. மேலும் அவர் இயக்கிய சூரரை போற்று திரைப்படம் வெளியாகி ரசிகர்களைத் தாண்டி மொத்த திரையுலகையே இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.மேலும், சமீபத்தில் இப்படத்திற்குச் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை,  சிறந்த இசையமைப்பாளர் என  மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சூரரை போற்று படத்திற்குப் பிறகு, இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், மீண்டும் சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.

மேலும், அப்படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது எனவும்   கே. ஜி. எஃப். திரைப்படத்தைத் தயாரித்த “ ஹோம்பேல் பிலிம்ஸ்” நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க இருந்த நிலையில்,  சூர்யாவின் அடுத்தடுத்த படங்களால் அவருடைய கால்ஷீட் கிடைக்காததால், இப்படம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் பீரியட் படமாக எடுக்கத் திட்டமிட்டிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகின.  சூர்யா கால்ஷீட் கிடைக்காத காரணத்தால், சுதா கொங்ரா தற்போது வேறு ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாகவும்
கூறப்படுகிறது. இப்படம் பெண்களை மையப்படுத்திய கதையெனவும் கீர்த்தி சுரேஷ் தான் லீட் கேரைக்டரில் நடிக்கிறார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சுதா கொங்கரா தற்போது  சூரரை போற்று படத்தை இந்தியில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இப்பத்தின்  போஸ்ட் ப்ரோடைக்‌ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள இவர், அப்படத்தின் வேளைகள் முடிந்ததும் கீர்த்தி சுரேஷை வைத்து படம் இயக்குவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டு வெளியான ‘மகாநதி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். இப்படி இருக்கையில், இவ்விருவருமே தேசிய விருது வென்றவர்கள் என்பதால், இவர்களுடைய கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன-அமைச்சர்

G SaravanaKumar

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி

Web Editor

இன்று முதல் வழிபாட்டு தலங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

Halley Karthik