கெளதம் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஆகஸ் 16, 1947. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகியாக ரேவதி நடித்துள்ளார். பல சின்னத்திரை பிரபலங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் இன்று டிரைலர் வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயரை எதிர்த்து போராடியர் வீரன் ஒருவரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது இந்த டிரைலர் மூலமாக தெரிகிறது.
அண்மைச் செய்தி:நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகைகள் கொள்ளை : பணிப்பெண் அதிரடி கைது
செங்காடு என்ற கிராமத்தில் நடக்கும் கதை என்று டிரைலரில் தெரிய வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.







