நியூயார்க் மாகாணத்தின் 57 வது கவர்னராகவும் , முதல் பெண் கவர்னராகவும் கேத்தி ஹோச்சுல் பதவியேற்றார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கும், மாகாண கவர்னர்களுக்கும் தேர்தல் நடந்தது. இதில் நியார்க் மாகாணத்தின் கவர்னராக இருந்த ஆண்ட்ரூ கியூமோ பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நியூயார்க் மாகாண கவர்னர் பதவிக்கு ஆளும் அமெரிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த கேத்தி ஹோச்சுலும் குடியரசு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளருமான லீ செல்டினும் போட்டியிட்டனர். இதில் கேத்தி ஹோச்சல் அவரை எதிர்த்து போட்டியிட்ட லீ செல்டினை தோற்கடித்து தேர்தலில் வெற்றி வெற்றார்.
இதனையடுத்து நியூயார்க் மாகாணத்தின் கவர்னராக கேத்தி ஹோச்சுல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். இதன் மூலம் நியூயார்கிலிருந்து கவர்னர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற வரலாறு படைத்தார். அவரோடு லெப்டினன்ட் கவர்னராக அன்டோனியோ டெல்கடோவும் பதவியேற்றார்.
https://twitter.com/GovKathyHochul/status/1610019872867770370?cxt=HHwWhIDTuemi-NcsAAAA
பதவியேற்ற பின் பேசிய கேத்தி ஹோச்சுல் ”இந்த மரியாதை, நான் இங்கு நிற்பதற்கு காரணம் நீங்கள். அடுத்த நான்கு வருடங்களுக்கு போராட நான் தயார் . நியூயார்க்கின் முதல் பெண் கவர்னர் என்ற வரலாறைப் படைக்க நான் இங்கு வரவில்லை, மாற்றத்தை ஏற்படுத்தவே நாங்கள் வந்துள்ளோம். நியூயார்க்கில் வசிக்கும் ஒவ்வொருவரையும் உயர்த்தி அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது ஒரே நோக்கம். அவர்களின் நேற்றைய தினத்தைவிட நாளைய தினம் சிறப்பாக இருக்கும். நியூயார்க் நகர மக்கள் எதற்கும் பயப்படாதவர்களாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கிறார்கள்.
மேலும் மறுபரிசீலனை செய்பவர்களாகவும், கனவு காண்பவர்களாகவும், செயலாற்றுபவர்களாகவும் இருக்கிறோம் எல்லாவற்றிற்கும் மேல் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். எனப் பேசினார். இதனோடு நியூயார்க் மாகாண பொது மக்களின் பாதுகாப்பை அதிகரித்தல், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு, குற்றச் சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுப்பது தனது இலக்குகளாக இருக்கும் எனவும் கூறினார்.
– பரசுராமன்.ப









