வேலுநாச்சியார் பிறந்த தினம்; பிரதமர் மோடி புகழாரம்

வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி அவருக்கு தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை பொறுத்த அளவில் ராணி லட்சுமி பாய் மற்றும் ராணி…

வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி அவருக்கு தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை பொறுத்த அளவில் ராணி லட்சுமி பாய் மற்றும் ராணி வேலுநாச்சியார் ஆகியோர் பெரும்பங்கை வகித்தவர்கள் என்று குறிப்பிடலாம். இவர்களில் இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார்.

தென் இந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைக்கப்படுபவர். இவர் மகாராணியாக 18ம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட பெருமைக்குரியவர். இவர் வாள்வீச்சு, அம்புவிடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க்கலைகளையும் கற்று அதில் சிறந்தவராக விளங்கினார். மேலும் கன்னம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளை கற்று பன்மொழி புலமை உடையவராகவும் திகழ்ந்தார்.

https://twitter.com/narendramodi/status/1610154453755199489

முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் 293வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் அவரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில், “வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்” என பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.