கரூர் துயரம் எதிரொலி – பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு..!

கரூர் துயர சம்பவம் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

கடந்த 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது  கூட்ட நெரிசல் ஏற்பட்டு  41 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் பரப்புரை, ரோடு ஷோ போன்றவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் நாளை இல்லம் தேடி உள்ளம் நாடி சுற்று பயணம் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு ரோடு ஷோ நடத்த இருந்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் காவல்துறை சார்பில் ரோட்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

கரூர் துயர சம்பவம் எதிரொலியாக இந்த  ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி  மறுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.