கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலா 1100 கிலோ எடை கொண்ட காய்கறி, பழங்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து சித்திரை 1 சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை ஒட்டி கரூர் மாநகராட்சி அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 1100 கிலோ அளவில் காய்கறி பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை போன்று செல்லாண்டி பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்திலும்1000 கிலோ எடை கொண்ட காய்கறி பழங்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதற்கிடையே கேரட், பீட்ரூட், உருளை, பச்சை மிளகாய், செவ்வாழை, மாங்காய், அண்ணாச்சி தர்பூசணி , மாதுளை, நெல்லிக்காய் உள்ளிட்ட 20 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந் நிகழ்வுகளை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
—கோ. சிவசங்கரன்