குழந்தைகள் காப்பகத்தில் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

சீர்காழி அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் உடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி  குழந்தைகளுக்கான…

சீர்காழி அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் உடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளி  குழந்தைகளுக்கான அன்பாலய காப்பகம் இயங்கிவருகிறது. இக் காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை ஒட்டி காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினர்.

தொடர்ந்து குழந்தைகளால் செய்யப்பட்ட கைத்தறி ஆடைகளை கண்டு பாராட்டு தெரிவித்தார். பின்னர் குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வந்தார். இதற்கிடைய அன்பாலய குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரி அன்பாலய நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

—-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.