தமிழகம் செய்திகள்

கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு…

கரூரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஏற்பட்ட  விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கரூரை அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலை உள்ளது. இதில் கரூரை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் மீது மோதியது.

வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தூக்கி வீசப்பட்டது. இதில் சாலை ஒரத்தில் நின்று பேசி கொண்டிருந்த இருந்த, தொக்கப்பட்டி புதூர் சேர்ந்த பிரதாப் என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் காரை ஓட்டி வந்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவரும், இரு சக்கர வாகனத்தில் நின்று பேசி கொண்டிருந்த முத்துக்குமார், மதியழகன், சிவா
உள்ளிட்ட 4 பேர் படுகாயங்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன்
மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து கரூர் நகர
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

—-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்!

அணை பாதுகாப்பு மசோதா, அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்: மு.க.ஸ்டாலின்

Halley Karthik

”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

Web Editor