கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் – மாவட்ட எஸ்.பி, வட்டாட்சியர் நேரில் ஆய்வு!

கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கரூர், கடவூர் தாலுகா வீரணம்பட்டி நடுநிலைப்…

கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

கரூர், கடவூர் தாலுகா வீரணம்பட்டி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 168 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டிகளில் கெமிக்கல் கலக்கப்பட்டதாக தலைமையாசிரியர் ஏசுராஜ் புகாரை தொடர்ந்து, வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வு முடிவில் தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் சோப் ஆயில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. சிந்தாமணி பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு வட்டாட்சியர்
பரிந்துரைத்தார். ஆனால், நீண்ட நேரமாக உரிய விசாரணை நடைபெறாததால் கரூர் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் முத்துக்குமாருக்கு வட்டாட்சியர் புகார்
அளித்துள்ளார். அவர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.பி உடனடியாக குளித்தலை டி.எஸ்.பி ஸ்ரீதர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சம்பவ இடத்தில் குளித்தலை சரக டி.எஸ்.பி ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்கட்ட  விசாரணை நடத்தியதில் சின்டெக்ஸ் தொட்டிகள் 3 உள்ளதும் அந்த மூன்றிலும் சோப் ஆயில் கலக்கப்பட்டதும் தெரியவந்தது. பின்னர் முழுமையாக தொட்டிகளில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஆய்வுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள்
நேரில் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் கடந்த ஜீன் 6 -ம் தேதி பட்டியலின இளைஞர் கோயிலுக்குள் அனுமதிக்காத பிரச்சனையில் கோயில் பூட்டப்பட்டதையடுத்து இரு பிரிவினர் பிரச்னை ஆட்சியர் பேச்சுவார்தையில் உடன்பட்டு கோயில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.