ஆரணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் – கொட்டும் மழையில் காத்து கிடக்கும் பொதுமக்கள்!

ஆரணி பேருந்து நிலையத்தில், ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து நிலையம் வெளியே கொட்டும் மழையில் நனைந்தவாறு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவா் பேருந்துக்காக காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி,செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர்…

ஆரணி பேருந்து நிலையத்தில், ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து நிலையம் வெளியே கொட்டும் மழையில் நனைந்தவாறு மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவா் பேருந்துக்காக காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி,செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
தொடர் கனமழையினால் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பள்ளி மாணவிகள்
மழையில் நனைந்தவாறு செல்கின்றனர். ஆரணி பழைய பேருந்து சாலையில் மழைநீர் காற்றாற்று வெள்ளம் போல் ஓடின. இதில் வாகனங்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் கடந்து சென்றன. மேலும் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் மழை நீர் காரணமாக வெளியூர் செல்லும் பயணிகள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மழைக்கு ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பேருந்து நிலையம்  வெளியே நனைந்தவாறு பேருந்துக்காக காத்துக் கிடக்கின்றனர்.

பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செய்துள்ளதால் மழைக்கு ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் பேருந்து நிலையத்தில் அமர இடம் இல்லாததால் மழையில் நனைந்தவாறு பேருந்து நிலையம் வெளியே மழையில் நனைந்து கொண்டு தனது மாற்றுத்திறனாளி செயற்கை கால்களை சரி செய்து கொண்டு இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆரணி நகராட்சி பேருந்து நிலையக் கடைகளின் உரிமங்களை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வழக்கு பதிவு செய்து உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.