மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட…

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர்.

விழாவில் வணக்கம் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மிகச்சிறந்த வரலாறு உள்ளது; இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்க தனித்துவம் மிகுந்தவர் கருணாநிதி எனவும், அனைத்து துறைகளிலும் அறிவு மிகுந்தவராக திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி என குறிப்பிட்டார். சாதியை ஒழிக்க சமத்துவபுரங்களை உருவாக்கியவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார். நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு எனக் கூறி உரையை நிறைவு செய்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.