கார்த்திகை திபத் திருநாளையொட்டி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அன்பும் அருளும் அறமும் ஆன்மிக ஒளியும் உலகெங்கும் தழைத்தோங்கச் செய்யும் திருக்கார்த்திகைத் திருநாளில், சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்.
திருமுறைகள் போற்றும் திருவருள் நாயகனாம் ஈசனின் பெருமையைப் பறைசாற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஏற்றப்படும் மகாதீபம், வெறும் தீப ஒளியல்ல; அது ஞானத்தின் ஒளி, அறத்தின் ஒளி, இறைநம்பிக்கையின் ஒளி, மெய்ஞ்ஞானத்தின் பேரொளி!
“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!” என்ற திருவாசகத்தின் அருள்மொழி ஒவ்வொரு இல்லத்திலும் ஒலிக்கட்டும். சிவசிந்தனை ஒவ்வொரு உள்ளத்திலும் நிலைக்கட்டும்.
அப்பர் பெருமானின் சிவபக்தியும், திருஞானசம்பந்தரின் தமிழிசையும், சுந்தரரின் இறையன்பும், மாணிக்கவாசகரின் அருள்மொழிகளும் போற்றிப் பாதுகாக்கும் நமது தமிழ்ச் சைவ மரபு என்றும் தழைத்தோங்கட்டும்.
அறியாமை அகன்று ஞானம் பிறக்கட்டும்!
அகந்தை அழிந்து அன்பு மலரட்டும்!
பகைமை மறைந்து சகோதரத்துவம் பெருகட்டும்!
இல்லங்கள் தோறும் இன்பமும், உள்ளங்கள் தோறும் அமைதியும், மக்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகட்டும்!
திருவண்ணாமலையின் மகாதீபப் பேரொளி உலகெங்கும் அமைதியையும் நம்பிக்கையையும் பரப்பட்டும். எல்லோருக்கும் எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் திருவருள் துணை நிற்கட்டும்.
அருணாசல சிவா! அருணாசல சிவா!
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
- அண்ணாமலையாருக்கு அரோகரா!
- நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




