தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் டீஸர் மற்றும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சர்தார் படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி இருந்தது. ஏற்கனவே படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இணையத்தில் லீக்கான போஸ்டர் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக இப்படம் தீபாவளிக்கு வெளியகும் என படக்குழு தரப்பில் தெரிவித்த நிலையில் தற்போது படத்தின் முதல் சிங்கில் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் எனப் படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் அறிவித்துள்ளார். இன்னும் தேதி குறிப்பிடாத இந்த அறிவிப்பால் டீஸர் வெளியாகும் தேதி சரியாகத் தெரியவில்லை. ஆனால் படத்தின் முதல் சிங்கில் பாடல் அல்லது படத்தின் டீஸர் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







