டப்பிங் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பாடல்கள், டீசர், மற்றும் ட்ரெலர் வெளியிடப்படும்.
விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது.
பின் சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்துவந்தது. ஏற்கனவே படத்திலிருந்து முக்கிய காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனதால், மீண்டும் இதுபோல் சம்பவம் நேரக்கூடாதென இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அப்படி இருந்தும் படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் பட்டதின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் எனவும் அந்த பாடலை பிரபல பின்னணி பாடகர்களான சித் ஸ்ரீராம் மற்றும் ஜெனிதா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் இதர காட்சிகள், டப்பிங் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பாடல்கள், டீசர், மற்றும் ட்ரெலர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







