முக்கியச் செய்திகள் இந்தியா

மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – எடியூரப்பா

மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை விவகாரத்தில், சட்டம் கர்நாடக அரசிற்கு சாதகமாகவே உள்ளது என தெரிவித்தார். மேலும், மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், சட்டப்படி போராட்டம் நடத்தி அணைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மேகதாது அணை திட்டத்தை தடுக்க யாராலும் முடியாது என்று கூறினார். மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய திட்டம் என்பதை விளக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்தக் கடிதத்திற்கு சாதகமான பதில் வரவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

ஆனாலும் எந்த ஒரு சூழலிலும் மேகதாது அணை திட்டத்தை கைவிடவோ, திட்டத்திலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கோ இடமில்லை என கர்நாடக மக்களுக்கு உறுதியளிப்பதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறினார். மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் கர்நாடக – தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் காவிரி பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிரடி காட்டும் ஆளுநர் தமிழிசை!

Niruban Chakkaaravarthi

டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

போதைப் பொருள்: பிரபல இயக்குநர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்

Saravana Kumar