வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியிருப்பதாவது, “கொரோனா நோய்த் தொற்றால் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 30-ஆயிரம் குடும்பங்கள் இந்த நிவாரண உதவியால் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.250 கோடி முதல் ரூ. 300 கோடி வரை செலவாகும். இதுபோன்ற அறிவிப்பை நாட்டில் முதல் முறையாக கர்நாடக அரசுதான் அறிவித்துள்ளது.
அதேபோல் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் 384 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் மூன்றாயிரம் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் நிதி நிலைமை சீராக உள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசால் உதவ முடிகிறது” என முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.
முன்னதாக சுற்றலா துறையை நம்பி வர்த்தகம் செய்யும் தொழில்முனைவோர்கள் முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது ஹோட்டல் மற்றும் தனியார் சுற்றலாத் தளங்கள் மீதான சொத்துவரியைத் தள்ளுபடி செய்யவேண்டும், நிறுவனங்களின் உரிமை (License)கட்டணத்தை இரண்டு தவணையாகச் செலுத்த அனுமதிக்கவேண்டும் மற்றும் மின்சார கட்டணத்தைத் தள்ளுபடி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டு வரும் ஜூன் 21-ம் தேதி முதல் செயல்படு கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.