முக்கியச் செய்திகள் இந்தியா

கர்நாடக ஆட்டோ வெடிப்பு; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட டிஜிபி

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல,  இது திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக டிஜிபி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட குக்கரில் வயர்கள் கொண்ட சர்க்யூட் அமைப்பு இருந்ததை போலீசார் கண்பிடித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த சம்பவம் விபத்தாக நடைபெறவில்லை. இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். குறிப்பாக இந்த கும்பல் பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விட திட்டம் தீட்டி உள்ளனர் என்று தகவலை பதிவிட்டுள்ளளார்.

அந்த ஆட்டோவில் பயணித்த பயணி பயன்படுத்திய அடையாள அட்டைகள் அனைத்தும் போலி என தெரிய வந்துள்ளது. அந்த பயணி பயன்படுத்தி வந்த சிம் கார்டு கோவையில் இருந்து வாங்கி இருப்பதாக கர்நாடக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் தொடர் வாகன தணிக்கை சோதனையை மேற்கொண்டும் பாதுகாப்பையும் அதிகரிக்க கூறியும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

G SaravanaKumar

வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Gayathri Venkatesan