பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடியில்
ஈடுப்பட்ட காரைக்கால் சேர்ந்த தம்பதிகளை புதுச்சேரி காவல் துறை தேடி
வருகின்றனர்.
புதுச்சேரி மாவட்டம், லாஸ்பேட்டை நாவற்குளம் ராஜாஜி நகரை சேர்ந்த சண்முகம் (வயது 42) கட்டிடம் கட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு காரைக்கால் மேல ஒடுதுறையை சேர்ந்த ராஜ்குமார் அவரது மனைவி அமுதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள், தாங்கள் இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் எனவும், புதுச்சேரி சேர்ந்தவர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வருவதாகவும்
தெரிவித்துள்ளார்கள்.
இதை நம்பிய சண்முகம் தான் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என
அமுதாவிடம் கூறியுள்ளார். பிரான்ஸ் செல்ல பாஸ்போர்ட் விசா மற்றும் அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்ய ரூ.16 லட்சம் வேண்டும் என அமுதா கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமுதாவின் வங்கி கணக்கில் ரூ.16 லட்சம் சண்முகம் செலுத்தி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் ரூ.3 லட்சம் பணம் வந்து சேர வில்லை என கூறி, மேலும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சண்முகத்தின் பாஸ்போர்ட் ஆகியவற்றை புதுச்சேரிக்கு நேரில் வந்த போது அமுதாவும் அவரது கணவரும் வாங்கி சென்றுள்ளார்கள்.பின்னர் சண்முகம் அமுதாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃபில் இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் சண்முகம். தொடர்ந்து, இவர்களை குறித்து விசாரித்ததில் கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக சண்முகம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் காரைக்கால் தம்பதியினரை தேடி வருகின்றனர். மேலும் அவர்களை கைது செய்த பின்னே அவர்கள் யார்யாரிடம் பண மோசடியில் ஈடுப்பட்டு உள்ளனர் என தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.