காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா,
புதுச்சேரியில் ஜூன் மாதம் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைப்பெற்றது.
காரைக்கால் போக்குவரத்து துறை சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பான் உள்ளிட்டவைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வாகனங்களில் ஏறி ஆய்வு செய்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை ஓட்டினார். ஆய்வின் போது துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு குமார், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் உடன்
இருந்தனர்.
-ம. ஶ்ரீ மரகதம்







