கன்னியாகுமரி அருகே உலா வரும் புலி – இரவில் வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்!

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து 12வது நாளாக உலா வரும் புலியானது கால்நடைகளை வேட்டையாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் கடந்த…

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து 12வது நாளாக உலா வரும் புலியானது கால்நடைகளை வேட்டையாடி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் கடந்த 5ம் தேதி புகுந்த புலி ஒன்று வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டை வேட்டையாடி சென்றது.தொடர்ந்து அந்தப்பகுதியில் உலா வந்த புலியானது நாய் மற்றும் பசு மாட்டை தாக்கி கொன்றது. மேலும் மனிதர் ஒருவரையும் தாக்க முற்பட்டது.நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.

இதனால் அப்பகுதி மக்கள் புலி நடமாட்டத்திற்கு பயந்து வீடுகளிலேயே தஞ்சம் அடைந்தனர்.இந்நிலையில் சிலோன் காலணியில் உள்ள அரசு ரப்பர் தோட்ட மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் ஜோதீஸ்வரி என்பவர் அங்கேயே குடியிருந்து வருகிறார்.

அவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த நாயை நேற்று புலியானது தூக்கிச் சென்றது. இத்தகவல் அப்பகுதி மக்களிடேயே காட்டுத்தீ போல் பரவுவதற்குள் மயிலார் ரப்பர் தோட்டத்தில் பசுவை புலி அடித்து கொன்று போட்டிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தப்போது அங்கு வேலை பார்த்து வரும் பத்மநாதன் என்பவரது மாட்டை புலி கொன்றிருப்பது தெரியவந்தது.

பெரிய அளவிலான பொருட்சேதமோ அல்லது மனிதரை தாக்கும் முன்போ புலியை கூண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொன்று சென்றுவிட வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.