கன்னியாகுமரியில் பனைப் பொருட்கள் பயன்பாடு குறித்த கண்காட்சி!

கன்னியாகுமரியில் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற பனைப் பொருட்கள் குறித்த கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் ஸ்கார்ட் கிறிஸ்தவ…

கன்னியாகுமரியில் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற பனைப் பொருட்கள் குறித்த கண்காட்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரியில் பனை சார்ந்த பொருட்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கண்காட்சியில் பனைஓலை பாய்கள்,கூடைகள்,நுங்கு,கருப்பட்டி உள்ளிட்ட ஏராளமான பனை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய அவர் கூறியதாவது:

பனை பொருட்களை பயன்படுத்துவதால் எந்த வயதினருக்கும் பாதிப்பு ஏற்படாது.பனை தொழிலை ஊக்குவிக்க அரசு மானியம் வழங்கி வருகிறது.அழிந்துவரும் பனை மரங்களை பாதுகாக்க அதிகளவில் பனை விதைகளை நட்டு பாதுக்காக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பனை விதைகள் வழங்கப்பட்டன.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.