தமிழ்நாட்டில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
அருப்புக்கோட்டை அடுத்த செம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.
இதற்கிடையே இப்புதிய கட்டிடத்தில் பிரசவ அறை, அவசர சிகிச்சை வார்டு, ஆய்வகம்,மற்றும் தொற்று சிகிச்சை பிரிவு ஆகியவை கட்டப்படுள்ளன.இதை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்ரமணியம் மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் விதிகளை மீறி இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட போலீ மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
—கோ. சிவசங்கரன்







