நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “Yolo” பாடல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் நவ. 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக். 26-ம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வட இந்தியாவில் படக்குழு தொடங்கியது. படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள் : ரீ-ரிலீஸில் சாதனை… 1000 நாட்களைக் கடந்தது #VinnaithaandiVaruvaayaa!
கங்குவா திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஃபயர் சாங்’ சில மாதங்கள் முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் இன்று (அக். 21) வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் முதல் பாடல் முழுக்க முழுக்க பீரியட் சாங்காக உருவாகி இருந்த நிலையில் இந்த பாடல் பார்ட்டி மூடில் அமைந்துள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.







