#Sorgavaasal | இணையத்தில் கவனம் ஈர்க்கும் ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்” டீசர்!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே பாலாஜி கடந்த 2010-ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, 2013ம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க…

#Sorgavaasal | RJ Balaji's "Sorkavaasal" teaser is attracting attention on the Internet!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே பாலாஜி கடந்த 2010-ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, 2013ம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, புகழ், ஜில் ஜங் ஜக், தேவி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2020ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன் தொடர்ச்சியா நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.

இதனிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்து வருகின்றார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. பின்னணியில் நடிகர் கருணாஸ் பேசுவது போல அமைந்துள்ள இந்த டீசர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதனை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அனிரூத் போன்ற பல்வேறு பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.