முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா – 30-ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் 30-ம் தேதி வரை கந்த சஷ்டி விழா அனைத்தும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

 

உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா நடைபெற்றது. இந்நிலையில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கோயிலில் உள்பிரகாரத்தில் ஜெயந்திநாதருக்கு பூஜை தொடங்கி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 12.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று, ஜெயந்தி நாதர் சண்முக விலாஷ் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இன்று சூரியகிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறந்ததும், ஜெயந்தி நாதர் அபிஷேகங்களும், இரவு தங்கதேரில் கிரிவலமும் நடைபெறுகிறது. பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த முறை தங்கத்தேர் கிரிவலம் இருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாகசாலை பூஜை 29-ம் தேதி மாலை வரை, காலை – மாலை என இரு நேரமும் நடைபெறுவதோடு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 30-ம் தேதி வரை கோயிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் தொடர் நேரலையாகவும், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு நேரலையாகவும் ஒளிப்பரப்பப்படுகிறது. எனவே, கோயிலுக்கு சென்று முருகப்பெருமானின் நிகழ்ச்சிகளை காணமுடியாத பக்தர்கள் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலை பின்தொடர்ந்து பார்த்து வழிபடலாம்.

 

மேலும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பாக கோயிலை சுற்றி 6 அகண்ட எல்.இ.டி. டிவி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்த டிவியில் நேரலையாக ஒளிப்பரப்படுகிறது. இதனையும், பக்தர்கள் கண்டு மகிழலாம். கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு கடற்கரையில் வைத்து நடைபெறுகிறது. இதில், வீர வாளுடன் எழுந்தருளும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ம் தேதி திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. பக்தர்கள் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

-இரா.நம்பிராஜன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Janani

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

Janani