வள்ளியூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்!

நெல்லை மாவட்டத்தில் குகைக்கோயிலான வள்ளியூர் முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின்  பழமைவாய்ந்த வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி…

நெல்லை மாவட்டத்தில் குகைக்கோயிலான வள்ளியூர் முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தின்  பழமைவாய்ந்த வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்றாகும். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்து, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும், சிறப்பு அபிஷேக,  அலங்கார தீபாராதனை நடக்கிறது. மேலும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

எட்டாம் திருவிழாவான  சூரசம்காரமாக தாரகன் வதம் வரும் 18ம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தளத்தில் தான் காசிப முனிவருக்கும் மாயாதேவிக்கும் பிறந்த அரக்கர்களாகிய சிங்கமுகன், தாரகன், சூரபத்மன் ஆகிய மூவரில் மாயன் வடிவமாகிய வெல்வதற்கு அரிய தாரகனை முருகப்பெருமான் எரித்தழித்து ஞானவேலானாக விளங்குகிறார். ஆகவே இங்கு தாரகன் வதம் நடப்பது விசேஷமாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.