நெல்கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் சாலைமறியல்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த தோட்டநாவல் ஊராட்சிக்கு…

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த தோட்டநாவல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் சொர்ணவாரி பருவம் முடிவடைந்து அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதி விவசாயிகளும் தங்களுடைய நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையத்தில் வந்து கொட்டியுள்ளனர். ஆனால் இதுவரையில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக இப்பகுதி விவசாயிகள் பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலையில் நெல்வாய் கூட்ரோட்டில் இருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கும் வரையில் தங்களுடைய போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.