உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் சார்பாக சிவகங்கையில் சிறப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரண்மனை வாயிலில் இருந்து தொடங்கிய போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். 5 கிமீ தூரத்தை இலக்காக கொண்ட இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.







