“Next Plan The Sun” – ஆதித்யா-எல்1 விண்கலம் பற்றிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ தலைவா் சோம்நாத் !

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார். நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான…

சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார்.

நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளி வரும் காந்த புயல் தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய காலங்களில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இது தான்.சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 என்ற விண்கலம் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்து. செப்டம்பர் 2-ம் தேதி செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் ஒரு சில நிமிடங்கள் பேசிய சோம்நாத் இந்த தகவலை வெளியிட்டார்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா – எல்1 விண்கலம் செலுத்தப்படவிருக்கிறது. இது விண்ணில் பாய தயாராக உள்ளது. சூழ்நிலை சாதமாக அமைந்தால் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவித்தார் சோம்நாத்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.