மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் கமீலா நாசர் ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கமீலா நாசர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை சார்பில் போட்டியிட்டார். கட்சி தொடங்கியதிலிருந்தே அவர் முக்கியமான பொறுப்புகளிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







