காமராஜர் பிறந்தநாள் : “சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்” – நயினார் நாகேந்திரன்!

சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், கல்வியை அனைவருக்கும் எட்டும் வகையில் கொண்டு சென்ற தொலைநோக்குப் பார்வையையும், எளிமை, நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றை வாழ்வின் அடையாளமாகக் கொண்ட அவரது உயர்ந்த பண்புகளையும் நன்றியுடன் நினைவுகூருகிறோம். அவரது சேவை மனப்பான்மையும், தன்னலமற்ற தலைமைத்துவமும் என்றும் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும்.

“கல்விக் கண் திறந்த தலைவர்” எனப் போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளில், அவரது உயரிய இலட்சியங்களையும், மக்கள் முன்னேற்றத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பையும் பின்பற்றி, சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம். புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.