நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படத்திற்கு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து ஜூலை 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நடிகர் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ரீலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தளபதி வந்த தள்ளி போய் தான் ஆகணும் ❤️❤️ ஒன் லாஸ்ட் டைம் ❤️…. பெஸ்ட் ஆஃப் லக் டீம் JN … #இம்மார்டல் உங்கள் ஆதரவுடனும் அன்புடனும் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது…” என்று தெரிவித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இம்மார்டல்’. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைத்துள்ளார். ஹாரர் ரோமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.




