புதிய பயணத்திற்கு தயாரான #Kamalhaasan… வைரலாகும் நியூ லுக்!

நடிகர் கமல்ஹாசனின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த…

நடிகர் கமல்ஹாசனின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தில், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. மேலும், இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், “புதிய தோற்றம், புதிய பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், கமல்ஹாசனில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.