அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஹோலி பண்டிகை இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி ஹோலி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் தங்கள் வீடுகளில் ஹோலி கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஹோலி பண்டிகைக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், நண்பர்கள், பிடித்தவர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடப்படுவதுதான் ஹோலி. இந்த பண்டிகையானது நம்முள் இருக்கும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். நம் அனைவரிடம் உள்ள வேறுபாடுகளை கலைந்து கொண்டாடப்படும் பண்டிகை எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார்.