“மக்களுக்கு சிறு துன்பம் என்றாலும் எனது குரல் எதிரொலிக்கும்”- கமல்ஹாசன்!

காலில் சிறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி…

காலில் சிறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால், சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், காலில் சிறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதால், சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 5 பாகங்களாக, 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து தமிழக மக்களை சந்தித்திருப்பதாக தெரிவித்தார். தற்போது, மருத்துவ ஓய்வில் இருந்தாலும், இணையம் வழியாக, மக்களுடன் தொடர்பில் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு சிறு துன்பம் என்றாலும் தமது குரல் எதிரொலிக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply