காரைக்குடி நபர் ஒருவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி தாய் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி இரண்டு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகர் பகுதியில் வசிப்பவர் 40 வயதான பாலாஜி. இவர் மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி தாய் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக சிறிமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த நபரை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







